அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில்

திருச்சிராபள்ளி

தான்தோன்றீஸ்வரர் வரலாறு

About Images

கோழியூர்

     உறையூருக்குக், கோழியூர் என்பது சிறப்புப்பெயர் ஒரு கோழி, செயிர்த்து, யானையுடன் போரிட்டு வென்ற காரணம் பற்றிக் கோழியூர் எனப்பெற்றது.

சுயம்புநாதர்

     கருதுவார் கருத்து அறியும் பெருமான், காந்திமதியின் கருத்தறிந்து, அவ்விடத்தில் சுயம்புலிங்கமாகத் தோன்றிக் காந்திமதிக்குக் காட்சியளித்தான். இறைவன், சுயம்புவாகத் தோன்றியதால், தான்தோன்றீசுவரர் என்னும் திருப்பெயர் அடைந்தார். காந்திமதி தான்தோன்றீசுவரரை வழிபட்டுப், போற்றிப் புகழ்ந்து, தன் இருப்பிடம் அடைந்தாள்.

     சூரவாதித்த சோழன் இந்த அற்புதச்செயல் கேட்டுத் தான்தோன்றீஸ்வரருக்குத் தனி ஆலயம் அமைத்து, வழிபாடும் நடக்க வேண்டிய எற்பாடுகள் செய்தான்.

திருத்தான்தோன்றி

     இக்கோயில் உறையூருக்குச் செல்லும் சாலையின் இடையில் உள்ளது. இதன் பெயரால் திருத்தான்தோன்றி என்னும் சிற்றூர் தோற்றம் பெற்றது.